Ticker

6/recent/ticker-posts

பதுளை ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 2016ம்ஆண்டிற்கான “விஷேட தகுதி காண் சன்மானம்”

பதுளை ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு 2016ம்ஆண்டிற்கான “விஷேட தகுதி காண் சன்மானம்”
Special Commendation Award
தேசிய உற்பத்தி திறனாய்வு அமைச்சினால் வருடாந்தம் நடத்தப் படும் தேசிய உற்பத்தித்திறன் போட்டிகளில் பதுளை ப/பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி 2015 – (2016) ம்ஆண்டிற்கான “விஷேட தகுதி காண் சன்மானம்” (Special Commendation Award) ஐ சுவீகரித்துள்ளது. 
கடந்த 2014 –(2015) ஆண்டு நடத்தப் பட்ட போட்டிகளில் குறித்த பிரிவில் (க .பொ. த. சா/த வரையுள்ள ) தேசிய ரீதியில் 5ம் இடத்தை பெற்ற இக்கல்லூரி தகுதி காண் சான்றிதல் ஒன்றை பெற்றுக் கொண்ட தேசிய ரீதியிலான ஒரேயொரு முஸ்லிம் பாடசாலையாகும்.

இவ்வாண்டு இன்னுமொரு படி மேலாக முன்னேறி “விஷேட தகுதி காண் சன்மானம்” (Special Commendation Award ஐ பெற்றுக் கொண்டுள்ளது இப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் இன்னுமொரு மைல் கல்லாகும் என்று கல்வித்திணைக்கள உயரதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments