ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த இளைஞன் இன்று (16) அதிகாலை 2.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் மஞ்சுள கருணாரட்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த இளைஞனை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 05ம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது காணாமல் போயிருந்த 20 வயதுடைய கயாசன் என்ற இளைஞர், திக்குவல்லை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்து இருந்த போது, விகாரையின் தேரரினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, தேரரின் உதவியுடன் நேற்று அந்த இளைஞர் பொலிஸில் சரணடைந்தார்.

0 Comments