Ticker

6/recent/ticker-posts

பம்பலபிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் ஐவர் கைது – வாகனம் மீட்பு

பம்பலபிட்டிய வர்த்தகர் ஷகீம்  சுலைமான் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனமொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்பில் கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இருவர் நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டனர். 

பம்பலப்பிட்டி கொத்தலாவலை அவனியூவைச் சேர்ந்த மொஹமட் ஷகீம் ஆகஸ்ட் 22 ஆம் திகதி திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 24ஆம் திகதி மாலை இவரது சடலம் மாவனல்லை ருகுலேகம பிரதேசத்திலிருந்து மீட்க்கப்பட்டது. இதேவேளை, கடந்த 25 ஆம் திகதி குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் 5 பேருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments