Ticker

6/recent/ticker-posts

மெர்வின் சில்வாவின் மகனின் பாதையில் செல்லும் மைத்திரியின் மகன்?

இன்று 8ம் திகதி அதிகாலை கொழும்பு டவுன்ஹோல் பிரதேசத்தில் உள்ள Clique   என்ற  இரவு விடுதியில்  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் மகனுக்கும் விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் மேற்படி இரவு விடுதிக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.


மேற்படி விடுதிக்கு அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட  தஹம் சிரிசேனவுக்கும்   விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்  இடையில்  இந்த தகராறு இடம்பெற்றதாகவும் இதில் ஒருவர் காயமுற்று கொழும்பு அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான  செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் இருப்பதற்காக ஊடகங்கள் மீது பலத்த அழுத்தங்கள் பிரயோகிப்பப்படுவதாகவும் அந்த இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments