Ticker

6/recent/ticker-posts

வடக்கில் அரச பயங்கரவாதம் அரங்கேறுகிறது! சிவாஜிலிங்கம்

வட மாகாணத்திற்குள் அரச பயங்கரவாதம் அரங்கேறுகிறது. யாழ். பல்கலை மாணவர்கள் இருவரின் கொலைச் சம்பவத்தினூடாக இது தெளிவாகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யார் எந்த அறிவிப்பை விடுத்த போதிலும் யாழில் அரச பயங்கரவாதம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடும் முகமாக வட மாகாணத்திலுள்ள சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இன்று மாலை கூடி கலந்துரையாடவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments