Ticker

6/recent/ticker-posts

திருடர்களுடன் படுத்துறங்கும் மைத்திரி - ரணில் அரசாங்கம் !

மைத்திரி - ரணில் அரசாங்கம் திருடர்களுடன் படுத்து உறங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அதில் ஊழல் நடந்துள்ளதா எனபது தேடப்பட்டது. இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க கோப் குழு தீர்மானித்துள்ளார்.
பிரதமர் தேர்தலுக்கு முன்னர் 5 எதிர்ப்பார்ப்புகள் பற்றி கூறினார். அவை நிறைவேற்றப்பட்டதா என கேட்கின்றோம்.
விரைவில் வரவு செலவுத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. வரவு செலவுத்திட்டம் கொண்டு வருவதற்கு முன்னர் பல நிதி திருத்தச் சட்டமூலங்களை கொண்டு வந்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாமல் நாட்டை ஆட்சி செய்தது எமக்கு நினைவில் உள்ளது.
அரசாங்கம் திருடர்களுடன் படுத்து உறங்குகிறது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி என்ன? ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனக் கூறினர்.
ஆனால், ஜனாதிபதியின் கருத்து மூலம் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதுவும் நடக்காது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments