கண்டி கலவரத்தைத் தொடர்ந்து இனவாத ரீதியிலான இருமுனைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.
அண்மையில் பாதுகாப்பு படைகளின் உயரதிகாரியான ரவீந்திர சீ. விஜயகுணரத்ன முஸ்லிம்கள் தொடர்பாகவும். யுத்த காலங்களில் இராணுவ பிரிவுகளில் கடமையாற்றிய முஸ்லிம்கள் தொடர்பாகவும்
ஊடக மாநாடொன்றில் கருத்து வெளியிட்டார்.
ஊடக மாநாடொன்றில் கருத்து வெளியிட்டார்.
சிங்கள இனவாதிகளுக்கு இவர் கொடுத்த சாட்டையடி, சில தமிழ் சகோதரர்களின் மேனியையும் பதம்பார்த்து விட்டது. சிங்கள இனவாதிகளை நோக்கி சுழற்றப்பட்ட சாட்டையின் அடியின் வலியினால் சில தமிழ் சகோதரர்கள் அலறுவது எமது காதுகளில் விழ ஆரம்பித்திருக்கிறது.
இந்த வலி சாதாரண தமிழ் சகோதரர்களை மட்டுமல்ல பொறுப்புள்ள தமிழ் அரசியல்வாதி ஒருவரையும் பதம்பார்த்து இருக்கிறது.
முஸ்லிம்கள் பற்றி இராணுவ அதிகாரி தகவல் வெளியிட்ட அன்றிலிருந்து குறித்த அரசியல்வாதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தனது இனவாதக் கருத்துக்களை அரசியல் சித்தாத்தங்களாக அறிஞர் அண்ணா மற்றும் ஈவேரா பெரியார் 'ரேஞ்சில்' தனது டுவிட்டர், முகப்புத்தக பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
சிங்கள இனவாதத்தால் நொந்து போயுள்ள முஸ்லிம்களை தருணம் பார்த்து இந்த தமிழ் அரசியல்வாதி வம்புக்கிழுக்கும் தோரணையிலேயே கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்.
ஏனையு தழிழ் சகோதரர்களோ, ஏதோ முஸ்லிம்களால்தான் ஈழப்போராட்டம் தோல்வி கண்டது. இராணுவ அதிகாரியே அவரின் வாயினால் சொல்லி விட்டார் என்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் புலிகளின் தோல்விக்கான காரணத்தை நீங்களே பட்டியலிட்டுப் பாருங்கள்.
பூகோள மற்றும் பிராந்திய அரசியலில் பகடைக்காயாக செயற்பட்ட புலிகள் இயக்கத்தை நசுக்குவதற்கு எத்தனை நாடுகள் அணிவகுத்து வந்து இலங்கைக்கு உதவி செய்தன என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
இந்தியா புலிகளைக் கைவிடுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணமானார்களா?
ராஜீவ் காந்தியை கொல்வதற்கு முஸ்லிம்களா புலிகளுக்கு ஆலோசனை வழங்கினர்?
2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெறும் வேளையில் இந்திய அரசின் பிரதிநிதியாய் இலங்கையில் இருந்து கொண்டு புலிகளை அழிப்பதற்கு இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கிய விஜய் நம்பியார் என்ன முஸ்லிமா?
தமக்கு ஏற்பட்ட ஒரு வரலாற்றுத் தோல்வியை இன்னொரு சமூகத்தின் மீது ஏன் வீணாய் சுமத்தி நீங்கள் இன்பம் காண வேண்டும்?
புலிகள் செய்த அரசியல் திருவிளையாடல்களை மறைத்து விட்டு, மறந்து விட்டு இராணுவ அதிகாரி ரவீந்திர சீ. விஜயகுணரத்னவின் கூற்றில் தொங்கிக் கொண்டு முஸ்லிம் இனத்தை சாடுவதற்கு உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நல்லது!
இதை உங்களின்; தோல்வியை மறைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
புலிகளின் தோல்விக்கு முஸ்லிம்களை சமூக ஊடகங்களில் வம்புக்கு இழுக்கும் நீங்கள், இராணுவத்தோடு இணைந்து புலிகளுளுக்கு எதிராக போராடிய தமிழ் கூலிப்பட்டாளங்களை துணைப்படைகளைப் பற்றி ஏன் கள்ள மௌனம் காத்து வருகின்றீர்கள்?
இந்த தமிழ் கூலிப்பட்டாளங்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கவில்லையா?
அண்மையில் கடற்படை தளபதியாக பதவியேற்று ஓய்வு பெற்ற ட்ரவிஸ் சின்னையாவும் இலங்கை இராணுவ கட்டமைப்பிற்கு வலுசேர்த்த ஒரு தமிழன் தானே.
முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைந்து தமிழர்களை அழிக்க உதவிசெய்ததாக குற்றம் சுமத்தும் நீங்கள், ட்ரவிஸ் சின்னையா என்ற தமிழன் கடற்படையில் இணைந்து சேவையாற்றி கடற்படை தளபதியானது பற்றி ஏன் விமர்சிக்க முன் வருவதில்லை?
ட்ரவிஸ் சின்னையா கடற்படையில் சேவையாற்றும் காலத்தில் அவர் புலிகளின் படகுகளை நோக்கி குண்டுகளை வீசாமல் பூக்களை தூவியிருப்பாரா? நீங்கள் என்ன கதைக்கின்றீர்கள்?
ட்ரவிஸ் சின்னையா போன்ற எத்தனை தமிழர்கள் இலைமறைகாயாக இலங்கை இராணுவத்தில் இருந்திருப்பார்கள்?
ஏன் அவர்களை விமர்சிக்க தமிழ் சகோதரர்கள் முன்வருவதில்லை.
புலிகளுக்கு எதிராக போராடிய டக்ளஸ் தேவானந்தா என்ன முஸ்லிமா? அவரும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இறுதிவரை போராடிக் கொண்டிருந்தவர் தானே?
கருணா, பிள்ளையான் எல்லோரும் முஸ்லிம்களா? இவர்கள் புலிகளையும், போராட்டத்தையும் காட்டிக் கொடுக்கவில்லையா?
புலிகளுக்கு ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொடுத்த மஹிந்தவை சுமார் 2 இலட்சம் வாக்குளில் வெற்றிபெற வைத்தது யார்.?
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிடம் பல மில்லியன் ரூபாய்களை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு வன்னி மக்களுக்கு வாக்களிக்க தடைவிதித்தது புலிகள் இயக்கம்.
வன்னி வாக்குகள் தடைப்பட்டதால்தான் மஹிந்த குறைந்த வித்தியாச வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார்.
பல மில்லியன் ரூபாய்களளை இலஞ்சமாக பெற்று மஹிந்தவை ஜனாதிபதியாக்குங்கள் என்ற ஆலோசனையை புலிகளுக்கு வழங்கியது முஸ்லிம்களா?
புலிகள்தானே பணத்திற்காக மஹிந்தவை ஜனாதிபதியாக்கி மஹிந்தவின் கைகளாலேயே தனது கழுத்துகளை அறுத்துக்கொண்டு தமது போராட்டத்திற்கு முற்றுப்பள்ளி வைத்துக் கொண்டனர்.
புலிகளே தேடிக்கொண்ட இந்த அழிவிற்கு முஸ்லிம்கள் எப்படி பொறுப்புக்; கூற முடியும்?
தமிழராக இருந்து கடற்படை தளபதியான ட்ரவிஸ் சின்னையாவை விட்டு விட்டு இராணுவத்தில் கடமையாற்றிய முஸ்லிம்களை மட்டும் வெறுபடுத்தி விமர்சிப்பதற்கு உங்கள் அடிமனதில் உள்ள இனவாதமே காரணம்.
தாமே தமக்குரிய குழிகளை வெட்டி அழிவை அரவணைத்துக் கொண்ட அமைப்பே புலிகள் இயக்கமாகும். தன்னை விட்டால் ஆளில்லை என்ற இறுமாப்பில் தோல்வியை தமது தோள்களில் சுமந்துக் கொண்ட புலிகளின் வரலாறு உலகிற்கே ஒரு சிறந்த படிப்பினையாகும்.
0 Comments