கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்களை கடத்திச்சென்று காணாமல் செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சற்று முன்னர் சென்றடைந்துள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து மார்ச் மாதம் 7 ஆம் திகதி உத்தரவிட்டது.
குறித்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments