மதவாச்சி புனாவை பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து வவுனியாவிற்கு வந்துகொண்டிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் விபத்தில் சேதமடைந்துள்ளது.
இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வுகளுக்காக வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான காதர் மஸ்தானின் வாகனம் புனாவைப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது
எனினும் வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மதவாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments