Ticker

6/recent/ticker-posts

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக ,இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா  முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக 2,301 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில், மொத்தமாக 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
உலகளவில் 10 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்கு இதுவரை 53,000 உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா ரைவஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு  தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments