Ticker

6/recent/ticker-posts

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியம்

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட்  பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாரா கில்பர்ட், கோவிட் -19 வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

 "தடுப்பூசியின் முதல் மனித சோதனை அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ளது," என்றும் அவர் டைம்ஸ் சஞ்சிகைக்கு  அளித்துள்ள ஒரு  பேட்டியில் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ஒன்றை தயாரிப்பதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆராய்ச்சி சிறப்பாக செய்யப்பட்டால், கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments