Ticker

6/recent/ticker-posts

தடையை மீறி ஆராதனையில் ஈடுபட்ட போதகர் கொரோனா தொற்றால் மரணம்!

சிலி நாட்டில் கொரோனா தடுப்பு சட்டங்களை மதிக்காமல்  தேவாலயங்களைத் திறந்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ள  நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஒரு ஆராதனைக்கு தலைமை தாங்கிய ஒரு போதகர் இறந்துள்ளார்.

67 வயதான மரியோ சல்பேட்,  கொரோனா தொற்றால்  செவ்வாய்க்கிழமை  சாண்டியாகோ மருத்துவமனையில் உயிரிழந்தார், அவர் மார்ச் 23 ம் திகதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்பு போதகர் மரியோ சல்பேட்  சாண்டியாகோவிற்கு வெளியே பெயினில் உள்ள தனது தேவாலயத்திற்கு சுமார் 300 பேரை அழைத்து ஒரு ஆராதனைக்கு தலைமை தாங்கியுள்ளார்.

ஆராதனையில் பங்கேற்ற மற்ற மூன்று  போதகர்களும் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி மதக் கூட்டங்களை நடத்துமாறு  போதகர்கள் வலியுறுத்தி வருவது தொடர்பாக தென் அமெரிக்க நாட்டில் பெருகிவரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சல்பேட்டின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிலி அதிகாரிகள் இரவு ஊரடங்கு உத்தரவு மூலம் தொற்றுநோய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தலை கடினமாக அமல்படுத்தியுள்ளனர்.

சிலியில் இதுவரை, 8,000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்புற்றுள்ளனர், 90 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

Post a Comment

0 Comments