உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொரோனா கோவிட் -19 வைரஸ் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் ரகசியமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு வகை வௌவால்களிடமிருந்து பெறப்பட்ட கோவிட் வைரஸை மாற்றத்திற்கள்ளாக்கி, அதை ஆய்வகத்தில் ஒரு மனிதனுக்கு செலுத்தி, பின்னர் அதை வெளி சமூகத்திற்கு அனுப்பியுள்ளதாக அந்த தகவலில் சீனாவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவை விட எந்தவொரு பேரழிவையும் சீனா வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக கோவிட் -19 வைரஸ் பரவியது என்றும் அந்த தகவல் கூறுகிறது.
இதேவேளை அமெரிக்கா தான் சீனாவின் வுகான் நகரத்திற்குள் தனது இராணுவத்தைப் பயன்படுத்தி இந்த வைரஸை பரப்பியதாக ஏற்கனவே சீனா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments