எனதன்புக்குரிய முஸ்லிம் சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
ஈத் முபாரக்.
இந்தப் பெருநாளுடன் புதிய சுமூக வாழ்வுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோமாக.
எனதன்புக்குரிய முஸ்லிம் சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இந்தப் பெருநாளுடன் புதிய சுமூக வாழ்வுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோமாக.
ஈத் முபாரக்.!
அழகிய இலங்கைத் திருநாட்டிலும் உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு ரமழான் 1441 (2020) சவால் மிக்கதாக அமைந்திருந்தது. அல்லாஹ்வை கூட்டாக வணங்குவதற்காக வழமையாக அர்ப்பணிக்கப்படும் ரமழானில் இவ்வருடம் நாம் நமது வீடுகளில் தனியாகவும் குடும்பத்தினரோடும் வணக்கங்களில் ஈடுபட்டோம். இந்த அர்ப்பணிப்புக்காக, எனதன்புச் சகோதர சகோதரிகளை பராட்டுவதோடு வல்ல நாயன் உங்களுக்கு சிறப்புக் கூலி நல்க பிரார்திக்கின்றேன். அந்த தூய்மையான அர்ப்பணிப்பு நம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் வல்லோனின் கருணையையும் அருளையும் கொண்டுவரும் என நம்புகிறேன்.
எமது தக்வா (இறை உணர்வு ) வுக்கு உரமூட்டிய ரமழான் காலப் பயிற்சி, ரமழானுக்கு பிரியாவிடை அளிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் வீணாகிப் போகக் கூடாது. நமது வணக்க வழிபாடுகள் தர்மங்கள் போன்றே மனித உயிரின் புனிதத்துவம் பற்றிய நமது கரிசனையும் தக்வாவின் குணாம்சங்களில் ஒன்றாகும். "எவரொருவர் ஒரு உயிரை காப்பாற்றுகிறாரோ அவர் முழு மனித சமூகத்தையும் காத்தவர் போலாவார்" என்ற குர்ஆன் வசனத்தினை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் கொவிட் 19 க்கெதிரான போராட்டம் முடிந்து விடவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. ஆகையால் வேலை மற்றும அத்தியாவசியம் பொருட் கொள்வனவு போன்ற காரணங்களுக்காகவன்றி பொது இடங்களில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட் 19 தொற்றுக்கோ பரவலுக்கோ நாம் காரணமாக இருந்து விடாமல் ஊரடங்குச் சட்டத்தையும் ஏனைய சுகாதார பாதுகாப்பு விதிகளையும் மதித்து நடப்போமாக!
அளவற்ற அருளாளனும் இணையற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்முடைய நல்லமல்களை ஏற்று நமது நிலமைகளை சீராக்கி அவனது சிறப்பான அருள்களை நம்மீதும் நம் தேசத்தின் மீதும் பொழிவானாக!
புதிய சுமுக வாழ்வை பழக்கமாக்கித் கொள்ள வல்ல நாயன் நமக்கு உதவுவானாக!!
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
01 ஷவ்பால் 1441/ 24.05.2020

0 Comments