Ticker

6/recent/ticker-posts

இலங்கை தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் இருவர் கைது!


கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான உத்தரவுகளை மீறி பள்ளிவாசலில் தங்கியதாக இரண்டு இலங்கை பிரஜைகள் உட்பட 13 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு இலங்கை பிரஜைகளும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மற்ற 11 ஜமாஅத் உறுப்பினர்களும்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விசா விதிமுறைகளை மீறி மதப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக இலங்கை பிரஜைகளுக்கு  வெளிநாட்டினர் சட்டத்தின் 14 மற்றும் 14 சி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு இலங்கை பிரஜைகளின் கைது தொடர்பான    அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments