Ticker

6/recent/ticker-posts

நாமலுக்கு மரண அச்சுறுத்தல்




அரசியலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தங்கல்லை பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 12ம் திகதி இரவு 12.00 முதல் 12.40 மணிவரை 40 நிமிடங்கள் தொலைபேசி அழைப்பொன்றின் ஊடாக மேற்படி அசு்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மேற்படி முறையீடு தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார்.  


Post a Comment

0 Comments