அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையினால் எழுந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் ஒரு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரேஷார்ட் ப்ரூக்ஸ் (27) என்ற இளைஞன், அட்லாண்டாவில் வெள்ளிக்கிழமை இரவு வெண்டி டிரைவ்-த்ரூ அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சர்ச்சையையடுத்து, அட்லாண்டா பொலிஸ் பொறுப்பதிகாரி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
டிரைவ்-த்ரூ வீதியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒருவர் காரில் தூங்கிக் கொண்டிருப்பதாக அட்லாண்டா பொலிசாருக்கு, உணவகமொன்றிலிருந்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார், அந்த இளைஞனை சோதனை நடத்தும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ப்ரூக்ஸ் இறந்ததைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி அட்லாண்டாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை, ஆர்ப்பாட்டக்காரர்கள் அட்லாண்டாவில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையான இன்டர்ஸ்டேட் -75 இல் திரண்டு இடையூறு ஏற“படுத்தியதாக பிபிஸி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, பொலிஸ் காவலில் இருக்கும் நிராயுதபாணியான கறுப்பன் ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் குறித்து அமெரிக்கா முழுவதும் மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0 Comments