சுவர்ணவாஹினி தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கருணா வெளியிட்டிருக்கும் கருத்தை வைத்து அவருக்கெதிராக வழக்கு தொடுப்பதற்கான சந்தர்ப்பம் தெளிவாக இருக்கிறது என்று சட்டத்தரணி யு.ஆர். டீ. சில்வா கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள குற்றவியல் சட்ட விதிகளின் அடிப்படையில் கொலைக் குற்றத்திற்கான 296 சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழும் கருணாவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என்றும் கூறியுள்ளார்.
கருணா இந்தக் கருத்தை தாமாக முன்வந்து எந்த பலாத்காரமும் பிரயோகிக்கப் படாத நிலையில் சுயமாக கூறியிருப்பதால் சாட்சிகள் தொடர்பாக எந்த பிரச்சினையும் இந்த வழக்கில் எழுப்பப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றும் கூறிய அவர், நீதிமன்றத்தின் மூலம் கருணா குற்றவாளியாக காணப்பட்டால் மரண தண்டனை வழங்கப்பட இடமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

0 Comments