Ticker

6/recent/ticker-posts

சஜித்துக்கு நீடிக்கும் நெருக்கடி?


சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து மங்கள சமரவீர விலகியதைத் தொடர்ந்து கட்சிக்குள் நெருக்கடி நிலைமை தீவிரமடைந்து வருவதாக அறியவருகிறது.

பொதுத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டுள்ள பலர் கட்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் இன்னும் முக்கியமான பலர் கட்சியிலிருந்து வெளியேற இருப்பதாகவும் கதைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் தன்னையே முன்னிலைப்படுத்திப் பேசும் இயல்பும் மற்றும் தனிப்பட்ட அவரின் செயற்பாடுகளும் தேர்தல் வெற்றி தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையுமே பலரது விலகலுக்கான காரணம் என அறிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்குப் பின்னர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடு தொடர்பாக ஆதரவாளர்கள் மிகவும் அதிருப்தியுற்றிருந்தனர்.

தோல்வியடைந்த மக்களின் மனநிலையை ஆசுவாசப்படுத்தாமல் தான் காட்டில் உள்ள புலிகளை பாதுகாக்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக அறிவித்த போது சஜித்தின் கட்சி ஆதரவாளர்கள் நடுத்தெருவில் விட்டதைப் போலவே உணர்ந்தார்கள்.

கட்சியின் அங்கத்தவர்களையும் ஆதரவாளர்களையும் அணைத்து, அரவணைத்துக் கொண்டு செல்லும் திறமை சஜித்துக்கு இல்லை என்ற கருத்து அதிகரித்து வரும் நிலையில் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகுவது கட்சியின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தி வருவதாக அரசியல் அவதானிகளின் கருதுகின்றனர்.



Post a Comment

0 Comments