Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ஷக்கள் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை: சசிகலா ரவிராஜ்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். 

நல்லாட்சி எனக் கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சசிகலா ரவிராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்து வருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் அவர்கள் தொடர்பாக எதனையும் செய்யவில்லை.

நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசாங்கத்தினது உதவிகளை மட்டும் நம்பியிருக்காது புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவேன்.( 4tamilmedia)

Post a Comment

0 Comments