Ticker

6/recent/ticker-posts

தேர்தலுக்காக ஆசிர்வாதம் பெற்ற ரணில் விக்கிரமசிங்க!


2020 பொதுத் தேர்தலுக்கு ஆசீர்வாதம் பெறும் நோக்கில்  ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலர் நேற்று (13) மத இடங்களுக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் பங்கேற்றனர்.

 ஐதேக  தலைவர் ரணில் விக்கிரமசிங்க முதலில் கொள்ளுப்பிட்டி வாலுகாராம விஹாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் ரவி கருணநாயக்க, தயா கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு, ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கும் கொழும்பு ஹுனூபிட்டியில் உள்ள கங்காராம விகாரைக்கும் சென்று மத வைபவங்களில் கலந்து கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments