Ticker

6/recent/ticker-posts

கருணா அம்மானுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அழைப்பு


வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கருணா அம்மான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கருணா அம்மான் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் அண்மையில் அவர் வௌியிட்ட கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறியுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க வருமாறு கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். (newsfirst.lk)

Post a Comment

0 Comments