Ticker

6/recent/ticker-posts

அரசியலில் இருந்து ஓய்வு பெற சமல் ராஜபக்ஷவும் தயாா்!


அடுத்த சில வாரங்களில் சமல் ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் அவர் பதவி விலகுவார் என்றும், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் அறிய வருவதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உரிய நேரத்தில் பதவி விலகி ஓய்வு பெறாத  காரணத்தால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுத்த அழுத்தத்தின் காரணமாக பதவி விலகி ஓாிரு நாள் தலைமறைவாகி மறைந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். எவ்வாறாயினும், தான் பதவி விலகினாலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தவிர, தற்போது அமைச்சரவையில் ராஜபக்ஷக்கள் இல்லை.   நாட்டு மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ராஜபக்ஷகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்தாா்.

எவ்வாறாயினும் சமல் ராஜபக்சவும் உரிய நேரத்தில் பதவி விலகுவதாக இருந்தால் கடந்த காலத்தில்  சபாநாயகர் பதவியோடு அவா் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் ராஜபக்ஷக்கள் இலகுவாக பதவிகளை விட்டு விட்டு போகக் கூடியவா்கள் அல்லா்.  குடும்ப ஆட்சியை மக்கள் வெறுத்த போதும் அவற்றை பொருட்படுத்தாததால் சமல் ராஜபக்ச மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வந்தார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த நிபுன ரணவக்க ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments