ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொலைக்காட்சிகள் ஜே.வி.பியை
மறந்து விட்டு செயற்பட்டு வந்தால், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரும் அந்த
தொலைக்காட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிகளை ஜே.வி.பி புறக்கணிக்க வேண்டும் என
ஜே.வி.பியின் தலைவர்கள் கூடி இந்த விடயம் குறித்து கலந்துரையாடிய போது
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் உறுப்பினர்களின் வாதத் திறமை காரணமாக ஆளும் கட்சியின் வாயடைத்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் ஜே.வி.பியினருக்கு அழைப்பு
விடுக்க வேண்டாம் என அரசாங்கத்தின் உயர் மட்டம் ஊடகங்களுக்கு
உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 Comments