ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல்
பிரச்சாரத்துக்காக இந்திய நடிகர் சல்மான் கானை அரசாங்கம் அழைத்துள்ளதாக
ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலுள்ள நடிகர்கள் உள்ளிட்ட
கலைஞர்கள் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்துள்ள நிலையிலேயே,
இந்திய நடிகரைக் கூட்டி வந்து வாக்குக்கேட்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவும்,
அரசாங்கமும் முயல்வதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் கலந்து கொண்டு பேசும்
போதே அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித்
தலைவருமான ஹரீன் பெர்ணான்டோ மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
(படம்: நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது

0 Comments