Ticker

6/recent/ticker-posts

ஆளுங்கட்சியின் ‘சலூன்’ கதவை மீண்டும் திறந்துள்ளோம்: அமைச்சர் நிமல் சிறிபால

சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக கூட்டணி அமைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்போவதாகவும் எதிரணியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் அந்த தேசிய அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என தெரிவித்துள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
தேசிய அரசாங்கம் தான் ஜனநாயகத்துக்கு விரோதமாக சர்வாதிகாரத்துக்கு வழிவக்கும் எனவும் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ள அவர், தோற்கப் போகும் எதிரணியினர் மீண்டும் வந்து இணைந்து கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியின் ‘சலூன்’ கதவு எப்போதும் திறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த வாரம் கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments