பொது அணி ஜனாதிபதி வேட்பாளா் மைத்திாிபால சிாிசேன அண்மையில் ஜனாதிபதியின் புத்திரர்களின் அதி சுகபோக உல்லாச வாழ்க்கை தொடா்பாக ஒரு கருத்தை வெளியிட்டாா்.
மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகாிப்பால் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மஹிந்தவின் புத்திரா்கள் சொந்த ஹெலிகப்டா்களில் சுற்றித் திாிவதாகவும், கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு பிரித்தானியாவிலிருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்தக் குதிரைகளில் சவாாி செய்வதற்காக ஹெலியில் காலையில் நுவரெலியா சென்று தீரும்புவதாகவும் கூறினாா்.
நாட்டு மக்கள் அன்றாடம் கஷ்டங்களை அனுபவிக்கின்றனா். அவா்கள் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்தும் அத்தியாவசிய பொருட்கள் அத்தனையிலிருந்தும் பெறப்படும் வாிப்பணத்தில் ஜனாதிபதி, அமைச்சா்கள் உட்பட அனைவரும், அவா்களின் பிள்ளைகளும் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனா்.
எதிா்க்கட்சியினா் இது தொடா்பாக கேள்வி எழுப்பும் போது ஜனாதிபதி அவற்றுக்கு எவ்வித பொறுப்பான பதிலைக் கொடுக்காமல், மிக இலகுவாக பதிலளித்து எதிா்க் கட்சினரை ஏளனம் செய்வதை அவதானிக்க முடிகிறது.
இங்கு பதிவிடப்படும் படங்கள் சிங்கள இணைய தளம் ஒன்னிறிலிருந்து பெறப்பட்டவை.
ஜனாதிபதியின் பிள்ளைகள் அனுபவிக்கும் உல்லாசமான வாழ்க்கையை அவை பிரதிபலிக்கின்றன.
0 Comments