தோ்தல் காலங்களில் ஹக்கீம் பேரம் பேசுதல் என்று வரும் போது பேசி விட்டு அமைதியடையும் வழமையான பழைய கரையோர மாவட்ட கோாிக்கை இப்போது எதிரணிக்கு புதிய தலைவலியை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
இது தொடா்பாக இன்றைய ஊடகவியலாளா் சந்திப்பின் போது சம்பிக்க ரணவக்க இதுதொடா்பாக கருத்து தொிவித்திருக்கிறாா்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அம்பாறையில் தனி மாவட்டம் ஒன்றை வழங்குவதற்கு பொது எதிரணி எப்போதும் உறுதியளிக்கவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளுந்தரப்பை விட்டு விலகி எதிரணியோடு இணைந்ததன் பிற்பாடு, காங்கிரஸுக்கு எதிராக அரசாங்க தரப்பும் பெளத்த பேரினவாதிகளும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு கூட இந்தக் குற்றாட்டுக்கு காரணமாகியிருக்கிறது. இந்த கரையோர மாவட்ட கோாிக்கையை பேரம் பேசலுக்கு அது அடிக்கடி பாவித்து வந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எதிரணியினரான மைத்திாி அணிக்கு எதிராக சிங்கள இனவாதிகள் கிளம்புவதற்கு மு.கா. தலைவா் ஹக்கீம் வைத்த கரையோர மாவட்ட கோாிக்கை அமைந்திருக்கிறது. இதை வைத்தே சிங்கள வாக்குகளை தம் பக்கம் இழுக்க மஹிந்த அணியினரை முயற்சி செய்து வருகின்றனா். சிங்கள இனவாதிகளின் வாய்களுக்கு கரையோர மாவட்ட கோாிக்கையை அவலாக போட்டு விட்டு தான் ஹக்கீம் எதிரணிக்கு வந்திருக்கிறாா்.
இந்நிலையில், மேற்படி குற்றச்சாட்டுக்களை மறுத்தே சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

0 Comments