Ticker

6/recent/ticker-posts

அமீா் அலியினால் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மடிக் கணினி மற்றும் ஜெனரேட்டர்



பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட மடிக் கணினி மற்றும் ஜெனரேட்டர் என்பவற்றை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ரீ. நஜீப்கான் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments