
இத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஸாத் பதியுதீன், முஸ்லிம் காங்கரஸ் கட்சி தலைவர் றவூப் ஹக்கீம், ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் கருஜெய சூரிய, ஆஸாத்சாலி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேன, ஊழல் நிறைந்த இந்த அரசாங்கத்தினை இல்லாது ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றினைத்துள்ளோம். எமக்கு முன் தோன்றுவது எல்லாம் வெறும் மாயங்களே அபிவிருத்தி என்ற பெயரால் எமது நாடு ராஜ பக்ஷ குடும்பத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது.
இதற்கு முடிவு கட்டும் ஒரு தேர்தலாக இதனை கருதுகின்றேன். எமது உரிமை போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றினைத்து வாக்களிக்க வேன்டும்.
பதவிகளையும் சொந்துக்களையும் எம் முன் கொண்டு வந்து ஆசை காட்டி மோசம் செய்ய பார்க்கின்றனர். அவ்வாறே எனது நன்பர் அமீர் அலியையும் இழுக்கப்பார்த்தனர் மக்களின் நலனை மாத்திரம் சிந்தித்த எனது நண்பர் அமீர் அலி அவர்களுக்கு சரியானதொரு பதிலை வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.
0 Comments