Ticker

6/recent/ticker-posts

''அப்பா எனக்கு நீங்கள் வேண்டும்'' விமானியின் மகள் உருக்கம்..!

மாயமான எயாா் ஏசியா விமானத்தின் விமானி இரியான்தோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் அப்பா திரும்ப வீட்டுக்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவில் உள்ள ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய எயார் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடல் பணியும் துவங்கியுள்ளது.

விமானத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த இரியான்தோ ஓட்டினார். அவர் இதுவரை 6 ஆயிரத்து 100 மணிநேரம் விமானம் ஓட்டியவர். துணை விமானியான பிரான்சைச் சேர்ந்த இம்மானுவல் ப்ளெசல் 2 ஆயிரத்து 275 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர். 

இந்நிலையில் விமானி இரியான்தோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது, 

'அப்பா திரும்பி வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பா வாங்க நான் உங்களை பார்க்க வேண்டும்' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். விமானி இரியான்தோவுக்கு மனைவி மற்றும் பாடசாலை செல்லும் 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments