Ticker

6/recent/ticker-posts

மனச்சாட்சிப் படி வாக்களியுங்கள். அரச ஊழியர்களுக்கு ஹக்கீமின் வேண்டுகோள்.


முஸ்லிம் மக்களின் அதிக பட்ச ஆதரவினை பெற்ற கட்சி என்ற வகையில் சமூகம் , கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் ஜனநாயக உரிமையினை முதன்மைப்படுத்தி நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ள தபால்மூல வாக்களிப்பின் போது தமது மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு, மு.கா அரச ஊழியர்களை வேண்டிக்கொள்கின்றது என்பதாக ரவூப் ஹக்கீம் தனது முகப்புத்தகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின்  நிலைப்பாடு என்ன? என்பதை அறிய அரசியல் வட்டங்கள் ஆவலாய் இருக்கின்ற  வேளையில் ஹக்கீம் இப்பபடியாதோர் அறிவித்தலை தனது முகப்புத்தகத்தில் இட்டிருக்கிறார்.

வெளிப்படையாக இது வரை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குறிப்பிடாத ஹக்கீமின் இந்த அறிவித்தல் பலரின் விசனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பமாகின்ற நிலையில் கூட மு.கா இன்னும் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹாலிஎல வில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இ.தொ.கா வும் முஸ்லிம் காங்கிரஸும் தனது வெற்றிக்கு பலமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

றிஷாத் பதியுதீனின் அ.இ.ம.கா. இன்று எதிரணிக்கு தமது ஆதரவை தெரிவித்திருக்கும் நிலையில் ஹகீமின் தெளிவில்லாத நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Post a Comment

0 Comments