Ticker

6/recent/ticker-posts

த.தே.கூட்டமைப்பின் இருவர் கட்சி தாவினர்!!

இலங்கை அரசினது நீண்ட பேரம் பேசல்களின் மத்தியில் இதுவரை இரண்டு கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளையே வலைக்குள் விழுத்த முடிந்திருந்தது.
அவ்வகையில் கணவன் மனைவியென இரு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை அரச பக்கம் பாய்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது கட்சி தாவல் இதுவாகும்.

பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான நிரஞ்சன் மற்றும் அவரது மனைவியும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சிவசாந்தி ஆகிய இருவருமே இவ்வாறு கட்சி மாறியுள்ளனர்.
குளிரூட்டிய கார் பெமிட் மற்றும் இரண்டு கோடி பணம் தனக்கு பேரம் பேசப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு நகரசபை உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்தார். பொது மேடையில் ஏறி மஹிந்தவிற்கு ஆதரவை வெளியிட்டால் போதுமென பேரம் பேசியதாகவும் புலனாய்வு கட்டமைப்பின் அதிகாரிகளே தன்னை கட்சி மாற நிர்ப்பந்தித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வேளை தான் அதனை மறுதலித்ததாகவும் அவர் தெரிவித்ததுடன் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலரை வலைக்குள் விழுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments