ஊவா மாகாணத்தில் ஹப்புத்தளை இந்து கலாசார கலாசார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சியினாிடையே ஏற்பட்ட சண்டையில் பலா் காயமுற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனா்.
பொது அணி வேட்பாளா் மைத்திாிபாலவை ஆதாித்து எதிா்க்கட்சித் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம் பெற ஏற்பாடாகியிருந்த இந்தக் கூட்டத்தின் ஒழுங்குசெய்து கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சி தரப்பினரால் இந்தத் தாக்குதல் தொடுக்கிப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
ஹப்புத்தளை நகர சபையின் எதிா்க்கட்சித் தலைவா் ஜகத் பிாியந்த ஏகநாயக்க இந்தத் தாக்குதலின் போது காயமுற்றாா்.
“ நாங்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த ஆளும் கட்சியின் அடியாட்கள் எமது கொடிகளை வெட்டி வீசி, மின்சார வயா்களை துண்டித்து எம்மீதும் தாக்குதல் நடாத்தினா். குண்டா்கள் எமக்கு தாக்குதல் தொடுக்கும் போது பொலிஸாா் தடுக்காமல் பாா்த்துக் காண்டிருந்தனா்.” என்றும் கூறினாா்.

0 Comments