Ticker

6/recent/ticker-posts

தாலிபான்களை அழித்தே தீருவோம் - நவாஸ் ஷெரிப்


பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சீன உயர்மட்ட தூதுக் குழுவூடனான சந்திப்பின்போது ஷெரீப் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் வானொலி தகவல் ஒலிபரப்பியூள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளும் அனைத்தும் அழிக்கப்படும். அவற்றின் கொள்கைகள் எத்தகையதாக இருந்தாலும் சரிஇ அவை எந்த மத உட்பிரிவைச் சார்ந்ததாக இருந்தாலும் சரிஇ பாகுபாடின்றி தீவிரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும் என நவாஸ் ஷொPப் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் கூறும்போதுஇ "தீவிரவாதத்தை பாகிஸ்தான் மண்ணில் இருந்து வேரறுக்க பாதுகாப்புப் படை அனைத்து நடவடிக்கைகளையூம் மேற்கொண்டுள்ளது. தீவிரவாதத்தை தூண்டுபவர்கள்இ அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியூள்ளார்.

பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாட்டரசு உறுதி பூண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.



Post a Comment

0 Comments