Ticker

6/recent/ticker-posts

“குமரன் பத்மநாதனை கைது செய்யவேண்டாம்” – வீரவன்ச மன்றாட்டம்!

குமரன் பத்மநாதனை தண்டிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான ஜே.என்.பி. கட்சி கோரியுள்ளது. தற்போதைய அரசாங்கம் குமரன் பத்மநாதனை தண்டிக்கக் கூடாது என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் குமரன் பத்மநாதன் தாமாகவே சரணடைந்திருந்தார் என தெரிவித்துள்ளது.சரணடைந்த குமரன் பத்மநாதனை புதிய அரசாங்கம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முசாமில் தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி, குமரன் பத்மநாதனை தண்டிப்பதானது சர்வதேச புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் காலியில் மீட்கப்பட்ட ஆயுதக் கப்பல் தொடர்பில் புதிய அரசாங்கம் தேவையற்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் செயற்பட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் ஆயுதக் களஞ்சியத்துடன் தொடர்புடையவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் ஊடகங்களின் அம்பலப்படுத்தியன் மூலம் நாட்டின் நன்மதிப்பிற்கே குந்தகம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments