வளர்ந்து
வரும் இணைய தள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று
இரண்டு திசைகளிலும் ஒரே
வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது
முன்பு ஹெக்கர்கள் எனும் 'இணையத்திருடர்கள்' தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட
காலம் போய், தற்போது ஹெக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14.000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன.
வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹெக் செய்யக்கூடியதாக இருக்கிறது
என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹெக்கிங் சோதனை மேற் கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை
நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள்.
சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திருடன் செய்தால் அந்த வை-பையோடு இணைந்திருக்கும் பல நூறு அலைபேசியில் உள்ள உள்நுழைவு விவரங்கள் திருடியிருக்கலாம். அலைபேசியை இயக்கியிருக்கலாம். மின் னஞ்சல் கணக்குகளை ஹெக்
செய்து இணைய தள வங்கி கணக்குகளில் புகுந்து மோசடி செய்திருக்கலாம்.
அண்மையில் பிரிட்டன் கெபினெட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக் கையில்
அந்நாட்டில் பாதி பேர் இணைய குற்ற வாளிகளாக மாறியிருப் பது தெரிய வந்துள்ளது. சில
நிமிடங்களில் ஒரு சிறுமியால் வை-பை நெட் வொர்க்கை ஹெக் செய்ய முடியுமென்றால் ஒரு
தொழில்முறை ஹெக்கரால் எவ்வளவு பாதிப்பை உண்டாக்க முடியும் என்று சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

0 Comments