கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காலி துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை பொலிசார் கைப்பற்றி இருந்தார்கள். கடலில் மிதக்கும் ஆயுதக் கப்பல் இதுஎன்று கூறப்படுகிறது. கோட்டபாயவால் நடத்தி வந்த நடமாடும் ஆயுதக் களஞ்சியம் இதுவாகும். இருப்பினும் இது பினாமிகள் பெயரில் இயங்கிவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம்(19) மாலை இக்கப்பலில் என்ன இருந்தது என்பது போன்ற விபரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
இதில் 3,000 இயந்திரத்துப்பாக்கிகள் இருந்துள்ளது. குறிசுடும் (ஸ்னைப்பர்) துப்பாக்கிகள், மற்றும் 6,000 தோட்டாக்களும் இருந்துள்ளது எனத் தெரிய வருகிறது.இவ்வளவு பெருந்தொகையான ஆயுதங்கள் ஏன் கப்பலில் வைக்கப்பட்டு இருந்தது என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இவை விடுதலைப் புலிகளின் ஆயுதங்களாக இல்லையென்றால் இலங்கை ராணுவத்தின் ஆயுதங்களாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

0 Comments