அப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 6 அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து அதற்கு ஒத்த மாதிரியிலான பல்வேறு தொலைப்பேசிகள் சந்தைக்கு வந்தன. அந்த வரிசையில் ஐ-போன் 6 இன் துல்லியமான மாதிரியை கொண்ட ஒரு கைப்பேசி சீன நிறுவனத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் Dakele 3 என்ற ஸ்மார்ட் போனானது அப்பிள் ஐ-போனின் நகல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 அங்குல முழு HD திரையுடனான 1920 x 1080 பிக்செல் ரெசலூஷன், 64-பிட் MT6752 செயலி மற்றும் 2GB RAm போன்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐ-போனை ஒத்த மாதிரியான Dakele 3 இல் 16GB சேமிப்பகம் காணப்படுகின்றது. அத்துடன் 13 மெகாபிக்சல் கொண்ட IMX214 சோனியின் பின்புற கெமரா மற்றும் 8 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க சோனி கெமராவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2500 mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் Dakele 3 ஸ்மார்ட் போனானது, சீனாவில் 240 அமெரிக்க டொலர் விலையில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments