ஐக்கிய நாடுகள் சபையினுடைய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நீர்வேலியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
இதுவரையில் இலங்கையில் நடந்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒன்று விசாரணை அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை இரண்டாவது விசாரணைகளே நடைபெறுவதில்லை.
முன்னைய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை ஆரம்பிக்கவில்லை என்ற காரணத்தினால் தான் யுத்தம் முடிந்த 2 வருடங்களின் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறான விசாரணை ஒன்று வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்தது.
இப்பொழுது வந்திருக்கும் அரசாங்கமும் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள். நாங்கள் இந்த யுத்த விசாரணையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் ரோம் உடன்பாட்டில் கையொழுத்து வைக்கவில்லை ஆகவே இது எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்ற விடயத்தை.
ஆனால் முன்னர் இருந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் செய்யப்பட்ட பல்வேறுபட்ட ஊழல் நடவடிக்கைகளை, அவர்களின் பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த இருக்கின்றோமென கூறுகின்றார்கள்.
இதேசமயம் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடத்தி முடித்திருக்கின்றது. அது நம்பகத்தன்மையான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாரணை அறிக்கை.
ஆகவே அந்த விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஐ.நா சபையினுடைய இந்த விசாரணையென்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிக மிக முக்கியமான ஒரு விடயம். ஆகவே ஐ.நா சபை விசாரணை அறிக்கையை அதனுடன் நிறுத்தாமல் இந்த விசாரணை அறிக்கையை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த வேண்டும்.
விசாரணை அறிக்கையில் வரக் கூடிய விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் நடாத்த போகும் விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாதென்பது மிகத்தெளிவான விடயம்.
இது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் தங்கள் அனுபவங்களில் கண்டறிந்த உண்மை. எனவே இலங்கை அரசாங்கம் இப்பொழுது வர இருக்கின்ற விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல அதை தொடர்ந்து வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சரிவர செய்ய வேண்டுமென்பது மிக முக்கியமானது.
100 நாள் திடத்திலும் எமது பிரச்சினைகளுக்கான தீர்வில்லை. வர இருக்கின்ற பராளுமன்ற தேர்தல் முடிந்து அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வர இருக்கின்றதோ அந்த அரசாங்கம் தான் இனப்பிரச்சினை தொடர்பாக பேசும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்டாலும் கூட தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக மாற்றங்கள் ஏற்படுமா என்பது இன்னுமொரு கேள்வியாகவே இருக்கின்றது.
அந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாக இருந்தால் இந்த ஐ.நா விசாரணை அறிக்கையென்பது நிச்சயமாக சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதன் ஊடாகத்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி இதனை நகர்த்த முடியுமென நாங்கள் கருதுகின்றோம் என தெரிவித்திருந்தார்.

0 Comments