Ticker

6/recent/ticker-posts

இலங்கை அகதிகள் தொடர்பான கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது


இலங்கை தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று இந்திய – இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு, இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே கடிதம் அனுப்பி இருந்தது. 

இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். 

அதில் இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சூழ்நிலை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் உருவாகாத சூழ்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே நாடு திரும்புவது குறித்து நடைபெற உள்ள இன்றைய ஆலோசனை கூட்டம் அவசியமற்றதாக தமிழக அரசு கருதுவதால் இந்த கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 

ஆனாலும் இன்று டெல்லியில் இந்தியா – இலங்கை வெளியுறவு துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்க செல்லவில்லை.

Post a Comment

0 Comments