2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்று மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் வட மாகாண சபையினால் நேற்று கௌரவிக்கப்பட்டுள்ளனர். வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் யாழ் பொதுநூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தார்.
கணித பாடத்தில் தேசிய ரீதியில் முதல் இடத்தைப்பெற்ற யாழ் இந்து கல்லூரி மாணவன் பாக்கியாஜா டாருகீசன் மற்றும் தேசிய ரீதியில் முதல் பத்து நிலைகளுக்குள் பெற்றுக்கொண்ட மாணவர்கள் உட்பட வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டங்களில் சகல பாட நெறிகளிலும் மாவட்ட மட்டத்தில் முதல் இடங்களை பெற்ற மாணவர்கள் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் மற்றும் மாகாண அமைச்சர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments