Ticker

6/recent/ticker-posts

ஹக்கீமை ஏன் அரசாங்கம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவில்லை: விஜித ஹேரத்

முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் தனியான முஸ்லிம் நிர்வாக வலயம் ஒன்றை கோரியிருந்தால், அரசாங்கம் அவரை அப்போதே அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியிருக்க வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

அப்படி எதனையும் செய்யாத அரசாங்கம், முஸ்லிம் காங்கிரஸ்
அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னர் தேசத்துரோக முத்திரையை குத்தி வருகிறது என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிசார்ட் பதியூதீன் தரப்பை தேச துரோகிகள் என அடையாளப்படுத்த முயற்சித்து வரும் அரசாங்கம் இறுதி வரை அவர்களை தம்பக்கம் இழுக்க பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளையும் நடத்த முயற்சித்தது.
இந்த முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அந்த கட்சிகள் மீது ராஜபக்ஷ அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments