Ticker

6/recent/ticker-posts

Photos- த.தே.கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினா்களின் வீட்டின் மீது தாக்குதல்



த.தே.கூட்டமைப்பிலிருந்து விலகி ஜ.ம. சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்த கணவன் மனைவியான உள்ளுராட்சி மன்ற உறுப்பினா்களின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை (30) இரவு 10.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை நகர சபை உறுப்பினா் ந.நிறஞ்சன். அவரது மனைவியான பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நிறஞ்சன் கிருசாந்தி ஆகியோரது வீடே தாக்குதலுக்குள்ளானது

வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டின் வெளியில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் உரிமையாளர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தனர். பின்னர் பொலிஸார் அவ்விடத்துக்கு வந்தபோது இனம் தெரியாத தாக்குதலாலிகள் தப்பிவி்ட்டனர்.

இதனையடுத்து உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தி்ற்கு வந்து முறைப்பாடு பதிவு செய்ததுடன் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பருத்தித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





Post a Comment

0 Comments