Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சி நகர் பல்வேறு நலத்திட்டங்களில் புறக்கணிப்பு: அரச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதி மக்கள் கடந்த காலத்தில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அரசாங்க அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை  கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி அரச செயலகம், கரைச்சி பிரதேச செயலகம் என்பவற்றின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிள்ளதுடன் பிரமதர், வடமாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோருக்கும் பிரதிகளை கையளித்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி நகர மக்கள், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலகமான அறிவத்திற்கு வந்து பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு மகஜரை நேரடியாகக் கையளித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த பா.உறுப்பினர், தான் இந்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments