Ticker

6/recent/ticker-posts

முத்தரப்பு கிரிக்கட் இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணி எது?

முத்தரப்பு கிரிக்கட் தொடரின் 6 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று வெள்ளிக்கிழமை பேர்த்தில் நடைபெற்று வருகின்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி இந்தியா முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கட் தொடர் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகளில் 3 போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் ஒரு போட்டியில் இங்கிலாந்தும் மற்றுமொரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் முடிவுற்றது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுடன் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது. அதன்படி முத்தரப்பு கிரிக்கட் தொடரில் இதுவரை வெற்றியை பெறாத இந்தியா இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

Post a Comment

0 Comments