ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து செயற்படாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஓர் பின்னடைவு ஏற்பட்டதனை ஒப்புக்கொள்கின்றோம்.
எனினும், இதனை தோல்வியாகக் கருத முடியாது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியீட்டச் செய்ய முடியும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோர் பழைய விரோதங்களை மறந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் சுதந்திரக் கட்சியை காப்பாற்ற முடியாது.
கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை கருத்திற் கொண்டு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பிரசன்ன ரணதுங்க ஊடகமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments