ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளூர் விசாரணைக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் இந்நடவடிக்கையில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், ஐக்கிய நாடுகளுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும் என்றும் தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கையின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளதன் பின்னணியில், இது தொடர்பிலேயே டுடாஜிரிக் இவ்வாறு கூறியுள்ளார்.
0 Comments