எயார் ஏசியா கியூ. இஸட். 8501 விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் அந்த விமானம் துணை விமானியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக இந்தோனேசிய விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தின் தரவு பதிவு கருவியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்தே விசாரணையாளர்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்படி விமான தரவு பதிவு கருவியானது இந்த மாத ஆரம்பத்தில் விமானி
களின் அறையிலான குரல் பதிவு கருவியுடன் மீட்கப்பட்டது.மேற்படி விமான தரவு பதிவு கருவியானது இந்த மாத ஆரம்பத்தில் விமானி
அந்த விமானம் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி இந்தோனேசிய சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு பயணித்த வேளை விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் மூழ்கியது.
இதுவரை அந்த விமானத்தில் பயணித்த 70 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.இந்நிலையில் விமான தரவு பதிவு கருவியானது விமானத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பதற்கு தெளிவாக வரைபடமொன்றை தருவதாக அமைந்துள்ளது என இந்தோனேசிய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் தலைமை விசாரணையாளர் மரிட்ஜொனோ சிங்வொசுவர்னோ தெரிவித்தார்.
எயார் ஏசியா விமானத்தின் குரல் பதிவுகள் முடிவுறும் வரை அந்த விமானத்தின் கட்டுப்பாடு துணை விமானியின் கீழேயே இருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் இது வழமையான செயற்பாடு ஒன்றென அவர் தெரிவித்தார்.
ஆனால் இது வழமையான செயற்பாடு ஒன்றென அவர் தெரிவித்தார்.
அந்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் 30 செக்கனுக்குள் 32,000 அடியிலிருந்து 37,000 அடி வரையான உயரத்திற்கு மேலெழுந்ததாகவும் பின்னர் சடுதியாக 32,000 அடிக்கு விழுந்ததாகவும் விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
அந்த விமான விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட அறிக்கையே சர்வதேச சிவில் விமான அமைப்பிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையான இறுதிக்கட்ட அறிக்கை வெளியிடப்படுவதற்கு சுமார் 7 மாதங்கள் செல்லலாம் எனவும் இந்தோனேசிய விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments