Ticker

6/recent/ticker-posts

சம்பிக்க தேசத்துரோகி: திருமதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்

சம்பிக்க ரணவக்க் ஒரு தேசத்தின் துரோகி   அவர் தற்பொழுது பௌத்த மக்கள் விரோதியாக மாறிவருகின்றார் என தெரிவித்துள்ளார் திருமதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்.

திரைப்பட இயக்குனர் பேராசிரியர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற இந்த நாட்டின் சொத்தை சம்பிக்க ரணவக்க அவமதித்துள்ளார் சேறு பூசியுள்ளார். அவர்
ஜனாதிபதிக்கு சேறு பூசுவதாக சொல்லி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்வாழ்க்கை வரலாற்றை இந்த நாட்டின் கலைஞர்களின் குருவை அழித்துள்ளார் என நேற்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து தெரிவிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் திருமதி சுமத்திரா லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தெரிவிக்கையில் – எனது கணவருக்காக நான் ஹமிடியாவுக்குப் பேய் அவரது பிறந்தநாள் பரிசாக பெற்ற ஆடையை அணிந்திருந்த நிலையில் அவரை வாழ்த்த வந்த ஜனாதிபதி மஹிந்த ராசபக்ச அவரை  கட்டியணைத்தபோது ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
அந்த புகைப்படத்திலேயே விடுதலைப்புலிகளின் கே.பியின் தலையையும் கையும் ஒட்டி மாற்றி ஜனாதிபதி கட்டி தழுவுகின்றது போல உருவாக்கி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு சம்பிக்க ரணவக்க காட்டுகின்றார். இது தான் இந்த சம்பிக்கவின் பௌத்த தர்மம் இவ்வாறு அவர் ஏன் எனது கணவர் மீது சேறு பூசுகின்றார் என கேள்வியெழுப்பியிருந்தார்.

Post a Comment

0 Comments